Fund Raising 2021

Category:
  • 150,000.00

    Funding Goal
  • 45,993.00

    Funds Raised
  • 0

    Days to go
  • Target Goal

    Campaign End Method
Raised Percent :
30.66%
Minimum amount is ₹1499 Maximum amount is ₹1499 Put a valid number
Chennai, India, India

Alpha at Omega Foundation

1 Campaigns | 0 Loved campaigns

See full bio

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நீண்ட நாட்கள் கழித்து ஒரு விண்ணப்பத்துடன் எழுதுகிறேன். ஒரு மூன்று நிமிட வாசிப்பு மட்டுமே. நமது யூட்யூப் சானலில் இறுதியாக இட்ட இரண்டு வீடியோக்களை அநேகமாக இங்குள்ள அனைவரும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். காணாதவர்களுக்கு அதன் இரண்டாவது வீடியோவாவது கண்டால் தான் நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும்.
அந்த இரண்டாவது வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது போல இனி கட்டண பயிற்சிகள் கிடையாது. எல்லாமே யூட்யூபில் பதிவிடப்படும் என்று அறிவித்திருந்தேன். அதற்கு காரணம் அதிகம் பேர் அதில் பயனடைவார்கள் என்பதாலேயே. ஆனால் ஆல்ஃபா அட் ஒமேகாவின் செயல்பாடுகளுக்கு ஒரு நித்திய வருமானத்திற்கான சில செயல்திட்டங்கள் தேவை என்று உணர்கிறேன். ஏற்கனவே ஒரு சிறிய குடிசை தொழில் போல என் மனைவியின் உதவியுடன் சிறிய சிறிய தயாரிப்புகள் செய்ய தொடங்கியிருக்கிறோம். இரண்டாம் அலை கொரோனா ஓயாமல் அடிப்பதால் சிறிது சுணக்கங்கள் ஏற்பட்டு நிதி பற்றாக்குறையில் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். எங்களிருவர் சிகிச்சைக்காக ஆன செலவில் எங்கள் தனிப்பட்ட சேமிப்பும் காலி. இந்த அசாதாரண சூழ்நிலையில் நாம் எழுதிய நான்கு புத்தகங்களின் அச்சுப் பிரதியை அச்சகத்திலிருந்து வாங்க முடியாத சூழ்நிலை. உலகம் முழுதும் பொருளாதாரத்தில் ஸ்தம்பித்து போயிருக்கும் இந்நேரத்தில் நாங்கள் எம்மாத்திரம். ஆனாலும் கேட்டு விட வேண்டும், கேட்டால் தான் கிடைக்கும் என்பதல்லவா பிரபஞ்ச வடிவமைப்பு.
யாரிடம் கேட்பது, எதற்கு என்று கேட்பது என்று சுற்றும் முற்றும் பார்க்கும் போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை கலங்கலாகவே இருக்கிறது. கடனாக பெற விருப்பமில்லை. நன்கொடையாகவும் பெற விருப்பமில்லை. ஆனால் அடுத்த கட்டங்களுக்கு நகர நல்ல வீடியோக்கள், நன்மையளிக்கும் தயாரிப்புகள் உட்பட பல செயல்திட்டங்களை எந்த வித சிரமமுமின்றி நடத்த அடுத்த மூன்று நான்கு மாதங்களுக்காவது தாக்கு பிடிக்க வேண்டும். எனவே தான் இறையுணர்த்த என் கோரிக்கையை இங்கு உங்களிடம் தெரிவிக்கிறேன்.
ஆல்ஃபா அட் ஒமேகாவின் நோக்கங்களை செயல்படுத்த, தொடங்கிய சில நல்ல திட்டங்களை விட்டு விடவும் மனம் இல்லை. அதுவும் அந்த திட்டங்கள் சில குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கும் போது. என்ன செய்யலாம் என்று இறை வழிகாட்டுதலை நாடிக் கொண்ட நேரத்தில் “நீ விட்ட வேலையை தொடர்” என்பது போல என் கைகளில் “அகம் அற்புதம்” மாத இதழ்கள் இரண்டும் தட்டுப்பட்டது. அதில் கண்களில் உடனே பட்ட தலைப்புகள் “அகமே அற்புதம் செய்யும்”, “ஆதியில் விதிகள் உண்டாயிற்று”. இவை இரண்டும் தொடர்களாக எழுதப்பட்டு பிறகு புத்தகங்களாக பதிப்பிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். நமது மாத இதழ் முடங்கி போய்விட்ட நிலையில் இது கிடப்பில் போடப்பட்டது. என்றாவது ஒரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று. ஆனால் ஒரு வேளை இதைத்தான் பிரபஞ்சம் முடிக்க சொல்கிறதோ என்று மனதில் மின்னாயம் போல ஒரு ஒளிக்கீற்று. இவை இரண்டும் என் வாழ்க்கையின் அனுபவ பாடங்களை ஒன்று திரட்டியது. ஒன்று நமது சானலில் பிரபலமான அண்டமும் பிண்டமும் தொடரை மையமாக வைத்து பிரபஞ்ச விதிகளையும் பிரபஞ்ச வடிமைப்பை பற்றியும் எழுத முனைந்தது. மற்றொன்று என் தேடல் தொடங்கிய நேரத்தில், அதாவது நான் வீட்டில் முடங்கிப் போயிருந்த நேரத்தில் எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டபோது எனக்கு கிடைத்த பதில்களை திரட்டி எழுத நினைத்தது. இரண்டும் கிழக்கும் மேற்கும் இணையும் முக்கியப்புள்ளிகளை எடுத்து சொல்கிறது.
இந்த இரண்டு தலைப்புகளில் நான் எழுதிய இரண்டு அத்தியாயங்களையும் இங்கு PDF ஆக இணைத்துள்ளேன். இங்கு மாத இதழ் சந்தாதாரர்கள் அதை வாசித்து இருப்பீர்கள். வாசிக்காதவர்கள் வாசியுங்கள். இந்த இரண்டு புத்தகங்களும் ஒவ்வொன்றும் சுமார் இருநூறு முதல் முந்நூறு பக்கங்கள் மிகாமல் வரும். இங்கு உள்ளவர்களில் அனேகம் பேர் நமது “மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்” புத்தகம் வாசித்திருப்பீர்கள். “அண்டமும் பிண்டமும்” கண்டிருப்பீர்கள். இந்த புத்தகங்களையும் அதே நல்ல தரத்தில் தர விரும்புகிறேன்.
இந்த புத்தகங்களை நான் இனி எழுத தொடங்கப் போகிறேன். நல்லுள்ளம் கொண்ட அன்பர்கள் இந்த் புத்தகங்களை ஒரு நூறு பேர் முன் கூட்டியே வாங்கினால் ஆல்ஃபா அட் ஒமேகாவின் தற்போதைய நிலை சிறிது மாறும். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் நம் தயாரிப்புகளைக் கொண்டு வருமானம் ஈட்டவும், வீடியோக்களை பலரிடம் கொண்டு சேர்ப்பதால் கிடைக்கும் யூட்யூப் விளம்பர வருமானமும் இந்த நிலையை மாற்றிவிடும். இணைத்திருக்கும் PDF ஐயும் வாசித்து விட்டு இந்த படைப்புகளின் தன்மையை அறிந்து, இந்த நிலையை கடக்க ஆல்ஃபா அட் ஒமேகாவிற்கு உதவுங்கள்.
எழுதப்போகும் புத்தகங்களுக்கு விலை நிர்ணயிக்க முடியாது என்றாலும், இப்போதைக்கு இதை ப்ரீசேலாக வைத்து பின்வரும் 7 புத்தகங்களுக்கு ரூ. 1499/- (கொரியர் செலவு உட்பட) என்று நிர்ணயம் செய்திருக்கிறோம்.
* ஆதியில் விதிகள் உண்டாயிற்று
* அகமே அற்புதம் செய்யும்
* சத்யயுகம்
* மன்னித்தலின் மகத்துவம்
* தங்கக் கோடாரி
* அதிகாலை அபரிமிதம்
* பணத்தை ஈர்க்க ஆழ்மனசக்தி
மேற்காண்பனவற்றில் முதல் இரண்டு புத்தகங்கள் தவிர மீதமுள்ள 5 புத்தகங்களும் ஆகஸ்ட் மாதம் முடியும் முன்பு அனுப்பி வைக்கப்படும். “ஆதியில் விதிகள் உண்டாயிற்று” அக்டோபர் 8, 2021 வெளியிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். “அகமே அற்புதம் செய்யும்” இவ்வாண்டு (2021) முடிவிற்குள் உங்கள் கைக்கு வந்து சேரும்.
ஒரு நூறு பேரை அடைய எனக்கு உதவுங்கள். மற்றவர்களுடன் இது பற்றி தெரிவித்து இந்த இலக்கை அடைய உதவுங்கள். இது நன்கொடையாக நான் கேட்கவில்லை. இந்த ஒன்றரை லட்சம் ஒரு சில குடும்பத்தின் பட்டினி தீர்க்க பயன்படப் போகிறது. பலருக்கும் தெளிவளிக்கும் சில உன்னத படைப்புகள் வெளிவர உதவி செய்யப்போகிறது. அன்புடன் உதவுங்கள்!
இரண்டு புத்தகங்களின் மாதிரி அத்தியாயங்கள் பதிவிறக்கம் செய்ய:
எல்லாம் வல்ல இறைபேராற்றல் தங்களை அன்புடன் வழிநடத்தட்டும்.
அபரிமித அன்புடன்,
ஏ.வி.ஆர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Fund Raising 2021”

Your email address will not be published. Required fields are marked *

ID Name Email Amount
155S natarajan S natarajansenataraj9@gmail.com1,499.00
152Ponnappan Somasundaramspnlnt@gmail.com1,499.00
154Parvati Rparvathiyellowbutterfly@gmail.com1,500.00
151Sumathi Ssunplasticarts09@gmail.com1,499.00
150Balasubramanian Cbalasubramanian209@gmail.com2,000.00
141Antony Rajantonyraj555@gmail.com1,499.00
140Nagendra SVTnagendrasvt@gmail.com1,499.00
142Siranjeevi .siran.1981@gmail.com10,000.00
139Thanalakshmi Kajithpriyalakshmi@gmail.com1,500.00
143Sampath Psampath000001@gmail.com10,000.00